3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி.சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.
வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.
எட்டுத்தோட்டாக்கள் நாயகன் வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், திருநெல்வேலி இடங்களிலும், காசி உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது படக்குழு படத்தின் முழுப் படப்பிடிப்பையும் நிறைவு செய்ததோடு படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை துவக்கியுள்ளது. இப்படத்தின் டீசர் டிரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.