சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில், ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம்,‘ஏழு கடல் ஏழு மலை. இதில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர்.
விரைவில் வெளியாக இப்படம்,சமீபத்தில் நடந்த “ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பிக் ஸ்கிரீன்’ போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக இப்படம் திரையிடப்பட்டது.இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளதாகவும் பலரும் பாராட்டினர்.