விஷ்ணுவிஷாலின் தம்பி,‘ருத்ரா’ கதாநாயகனாக அறிமுகமாகும் புதியபடம், ‘ஓஹோ எந்தன் பேபி’ .இப்படம் இளைஞர்களைக் கவரும் வகையில் கலகலப்பான ‘ரோம் காம்’ திரைப்படமாக உருவாகவுள்ளது.
இப்படத்தை முன்னணி விளம்பர பட இயக்குநரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார்.பாலிவுட் நடிகை ‘மிதிலா பால்கர்’ கதாநாயகியாக இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’, ‘முதல் நீ முடிவும் நீ’ உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் தர்புகா சிவா, ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்திற்கு இசையமைக்கிறார்.
அச்சம் என்பது மடமையடா முதல் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, டேனி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.இதையடுத்து கோவா, பாண்டிச்சேரி மற்றும் இந்தியாவின் பல இடங்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது.