நிகில் நடிப்பில், பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது ‘சுயம்பு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்காக அதன் நாயகி சம்யுக்தா, குதிரையேற்ற பயிற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இப்படத்தின் நாயகன் நிகில், போர்வீரனாக நடிப்பதால்,ஆயுதங்கள், தற்காப்பு கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அவருடன் நாயகியாக நடிக்கும் நடிகை சம்யுக்தாவும் சில போர் சண்டைக்காட்சிகளில் நடிக்கவுள்ளதால், குதிரை சவாரி பயிற்சியை மேற்கொண்டுள்ளார்
. இதுகுறித்து நடிகை சம்யுக்தா கூறியிருப்பதாவது, “எனது அடுத்த படமான ‘சுயம்பு வுக்காக நான் குதிரை சவாரி கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் புதுப் பயணம் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் குதிரையுடன் இணக்கமாக பழகி இந்தப் பயணத்தை கற்று வருகிறேன். இதற்காக ஒரு குழுவாக நாங்கள் ஒன்றாகச் செயல்படுவது அழகாகவும் இருக்கிறது” என்றார்.மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள பிரமாண்ட அரங்கில் நடந்து வருகிறது.