மின்மினி என்ற திரைப்படத்தை தயாரித்த ‘SELRIN PRODUCTIONS’ பொன்னையன் செல்வம் இரண்டாவதாக தயாரிக்கும் படம்’ஆப்ரேஷன் லைலா’ இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார்
கமர்சியல் கிங் ஏ வெங்கடேஷ் இவரது இயக்கத்தில் முதல் முறையாக வெளிவர இருக்கும் ஹாரர் திரைப்படம் இது.
இப்படத்தில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, நாயகியாக சித்திக்கா சர்மா நடிக்க,வனிதா விஜயகுமார் முக்கிய கேரக்டரை ஏற்றுள்ளார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘டான்ஸ் மாஸ்டர்’ ஸ்ரீதர், வனிதா விஜயகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்
வரும் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில் அதன் சுற்றுவட்டார பகுதியில் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது .