சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் டீஸர் வெளியானது.முன்னதாக இதில் நடித்த சூர்யா பாலாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இப்படத்திலிருந்து விலகியது குறிப்பிடக்காது. இதையடுத்து சூர்யா கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் , உடல் முழுவதும் சேறுடன் காணப்பட்ட அருண் விஜய், ஒரு கையில் பெரியாரையும் மறுகையில் பிள்ளையாருடன் ஆக்ரோஷமாக காணப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் பிரம்மாண்டத்துடன் தொடங்கும் இப்படத்தின் டீசரில்,. தேவாலயத்தின் பின்னணியில், நெற்றி நிறைய விபூதி பட்டை குங்குமத்துடன் அருண் விஜய் காணப்படுகிறார். மேலும், மிஸ்கின், சமுத்திரக்கனி ஆகியோரும் இப்படத்தின் நடித்துள்ளனர். அதிரடி சண்டைக்காட்சிகள்இடம் பெற்றுள்ள இப்படத்தில், கிணற்றில் இருந்து ஒரு கையில் பெரியார், மறு கையில் பிள்ளையார் உடன் வரும் அருண் விஜயின் தோற்றம் பலரையும் பிரம்பிபில் ஆழ்த்துவதாக உள்ளது. ,இணையத்தில் வைரலாகி வரும் இப்பட டீசரில் பிடரியை சிலிர்த்துக்கொண்டு கர்ஜிக்கும் சிங்கமாய் அருண் விஜயின் தோற்றம் வேற லெவலில் இருப்பதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.