அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டு அதிமுகவை சேர்ந்த வெங்கடாசலம் ஏமாற்றுகிறார் என பரபரப்பை கிளப்பிய நிலையில், ஏ.வி.ராஜுவை சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருந்தும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்ட உத்தரவால் கடுப்பான ஏ.வி. ராஜு ,கூவத்தூரில் அதிமுகவினர் போட்ட ஆட்டம் குறித்து அளித்த பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்திலும் திரையுலகிலும் பெரும் புயலை கிளப்பி உள்ளது..இவ்விவகாரத்தில் பிரபல நடிகைகள் பற்றியும் பிரபல நகைச்சுவை நடிகர் பற்றியும் வெளிப்படையாக கூவத்தூருக்கு வந்ததாக ஏ.வி. ராஜு பேசியது சினிமா பிரபலங்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் தனது சமூக வலைதளத்தில்,”வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி உள்ளிட்டோரை டேக் செய்து நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்என்று இயக்குநர் சேரன் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.தெரிவித்துள்ளார்.