நடிகர் நானி,இயக்குனர் – விவேக் ஆத்ரேயாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள பான் இந்திய திரைப்படம் ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ இப்படத்தில் தனித்துவமான சாகசம் நிறைந்த இதுவரை அவர் ஏற்றிராத அதிரடியான கேரக்டரில் நடித்திருக்கிறார்.இப்படத்தில் நானியுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் இப்படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தை டி வி வி என்டர்டெய்ன்மென்ட்டின் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள் இந்நிலையில் இப்படத்தின் நாயகன்நாணி பிறந்த நாளில் அவ்ருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக இப்படத்தின் கிலிம்பஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த க்ளிம்ப்ஸ்.வீடியோ .எஸ். ஜே. சூர்யாவின் பின்னணி குரலுடன் தொடங்குகிறது. அவர் நானி குறித்து கூறுகையில், மற்ற மனிதர்களைப் போலவே கதாநாயகனும் கோபப்படுகிறான். ஆனால் அவன் அதை ஒவ்வொரு நாளும் காட்டுவதில்லை. அவனிடம் உள்ள தனி சிறப்பு என்னவென்றால்… எல்லா சம்பவங்களையும் பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு, சனிக்கிழமைகளில் தன்னை தொந்தரவு செய்தவர்களை வேட்டையாடத் தொடங்குகிறான். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா நானியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன் கிளிம்ப்ஸ் நிறைவடைகிறது.இப்படத்தின் ஒளிப்பதிவை முரளி. ஜி கவனிக்க, ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையமைத்துள்ளார்