கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தந்து 50வதுபடமான ’ராயன்’ \ படத்தை \ இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.\ இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’ராயன்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
தொடர்ந்து அப்படத்தில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் ஆகியோர்களின் போஸ்டர்களையும் வெளியிட்ட நிலையில் தனுஷ், தனது சமூக வலைதள பக்கத்தில் ’ராயன்’ படத்தின் கதா நாயகியான துஷாரா விஜயன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். .இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில்,
உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள். இப்படத்தில் தேசிய விருது நடிகையான, ‘அபர்ணா பாலமுரளி’ நடித்துள்ள தகவலை போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது படக்குழு. இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் ஜோடி அபர்ணாவா அல்லது துஷாராவா ரசிகர்கள் பட்டி மன்றம் நடத்தி வருகின்றனர்.