தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் நடிகை வரலட்சுமி சரத்குமார், தற்போது தனுஷின் 50வது படமான ராயன் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் சபரி படத்திலும் மலையாளத்தில் கலர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
இருவருக்கும் 14 ஆண்டுகள் பழக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த விழா மும்பையில் நடந்து முடிந்துள்ளது. இதில்,இருவரின் குடும்பத்தாரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். இவர்களது திருமண தேதி குறித்த அறிவிப்பே விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.