லயோலா கல்லூரியில் வைத்து நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தின் இடம் மாற்றம்பெற்று இன்று மதியம்ந டிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெறவுள்ளது !!
நாளை லயோலா கல்லூரியில் உள்ள பெட்ரம் ஹாலில் வைத்து நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க பொது குழு கூட்டம் டி. நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் வைத்து மிகப்பெரிய அளவில் காவல் துறையின் பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
இதில் நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடிகர் சங்க பொது குழு கூட்டம் நடைபெறுவது இதுவே முதன் முறை. பொது குழு ஏற்கனவே கூறியது போல் அதே நேரத்தில் நடைபெறவுள்ளது. பொது குழு கூட்டம் லயோலா கல்லூரியில் வைத்து நடைபெறாததற்கு போதுமான பாதுகாப்பு இல்லாதது தான் காரணம். மற்றும் இதில் சங்க நிர்வாகிகள் அனைத்து இடங்களிலும் இருந்து வந்து கலந்து கொள்ளவுள்ளனர். இப்பொதுகுழுவில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு விழா மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆகியவை சிறப்பாக நடைபெறவுள்ளது.இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.