அஜீத்தின் ‘என்னை அறிந்தால் ‘ பொங்கலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளியானதால் தியேட்டர் பற்றாக்குறை யென காரணம் கூறப்பட்ட து.மேலும் படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கியிருந்ததால் தள்ளிப் போடப்பட்டு , ஜனவரி 29-ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக அப்படத் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் அறிவித்திருந்தார் . இந்நிலையில் ,என்னை அறிந்தால் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு ,அடுத்த மாதம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்று அப்படத்தை வெளிநாடுகளில் விநியோகிக்கும் உரிமை பெற்ற அய்ங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையே இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டதாகவும் , படத்தைப்பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் சில இடங்களில் கத்தரி போட்டு விட்டு, யு/ஏ சான்றிதழ் வழங்கியதாகவும் ,ஆனால் அதை ஏற்காத படக்குழுவினர் டெல்லியில் ரிவைசிங் கமிட்டிக்கு போகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே என்னை அறிந்தால் மீண்டும் தள்ளி போனதற்கு உண்மையான காரணம் என்கிறது கோடம்பாக்கத்து பட்சி.