பவாகி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில், ஜெயச்சந்தர் மற்றும் பாலாஜி மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம், ‘இடி மின்னல் காதல்’ . இதில் ‘வஞ்சகர் உலகம்’ , விஜயின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதும், இப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
இவருடன் யாஸ்மின் பொன்னப்பா, பவ்யா தரிக்கா,ராதா ரவி,ஜெகன்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ள பாலாஜி மாதவன் கூறுகையில்,”இப்படத்தை ரொமான்டிக் திரில்லராக உருவாக்கியுள்ளோம்.
இப்படம் சென்னை போர் நினைவு சின்னத்தில் ஏற்படும் கார் விபத்து, அந்த விபத்தை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் சுவாரசியமான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. போர் நினைவு சின்னம் உள்ள இப்பகுதி முழுவதும் இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக சிறப்பு அனுமதி பெற்று இப்படத்தை இயக்கியுள்ளோம் .
ராணுவ உயர் அதிகாரிகள் இப்படத்தின் கதையை ஆர்வத்துடன் கேட்டது மட்டுமில்லாமல் உடனடியாக படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதியும் கொடுத்தனர் . இப்படத்தை இதுவரை இல்லாத மாறுபட்ட கோணத்தில் எடுத்துள்ளோம் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இப்படம் வரும் 29 ம் தேதி வெளியாகிறது இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுவது படக்குழுவுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம் என்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயச்சந்தர் பின்னம்நேனி,கவனிக்க, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்