மொழிகளை தாண்டி, கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இந்திய அளவில் ரசிகர்களை கவரக்கூடிய பான் இந்தியா திரைப்படமாக மட்டும் இன்றி, உலக அளவில் ரசிகர்களை ஈர்க்க கூடிய கதைக்களத்துடன், வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’.
‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகளும், யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ திரைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், வேதிகாவுடன் சாந்தினியும் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருப்பதோடு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அழகிலும், கவர்ச்சியிலும் கிரங்கடிக்கவும் செய்திருக்கிறார்.ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய சாகசங்கள் நிறைந்த ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வரும் ‘கஜானா’ கோடை விடுமுறையின் கொண்டாட்டமாக மே முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.
மேலும், ‘கஜானா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ப்ரீபுரொடக்ஷன்ஸ் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு அறிவிக்க உள்ளது.