கெட்டவனோடு சேராதே ,கெட்டழிஞ்சு போகாதே என்று ஊர் நாட்டுல பொதுவா சொல்லுவாங்க . இதை மய்யமாக வைத்துக்கொண்டு கதை பண்ணியிருக்கிறார்கள்.
எப்படியாவது முதல் வரிசைக்கு வந்துவிட்ட வேண்டும் என்று நெடுங்கால போராட்டம் நடத்தும் ‘மாஸ்டர்’ மகேந்திரன்தான் கதையின் நாயகன்.
சிறிய சிக்கலுக்கு தீர்வு காணச்சென்று, பாழுங்குழியில் வீழ்ந்து மொத்த வாழ்க்கையையும் தொலைப்பதுதான் , ’அமிகோ கேரேஜ்’.வீழ்ந்தவர் மகேந்திரன், பள்ளி, கல்லூரி, பெரிய தாதா என, முப்பரிமாணங்களில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அனுபவம் ,அதிரடி, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆதிரா, வழக்கமான ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்கு என்ன வாய்ப்பு தரப்படுமோ, அதுவே இவருக்கும் கிடைத்திருக்கிறது. என்ன கொடுக்கப்பட்டதோ அதை சரியாக செய்திருக்கிறார்.
அமீகோ கேரேஜின் உரிமையாளராகவும், போதைப்பொருள் விற்பவராகவும் நடித்திருப்பவர் ஜி.எம்.சுந்தர், கவனம் ஈர்க்கிறார்.
மற்றபடி, வில்லன்களாக நடித்திருக்கும் தாசரதி, முரளிதரன் சந்திரன் இருவரும் தோற்றத்தில் மிரட்டியிருக்கிறார்கள். இவர்களோடு மதனகோபால், சக்தி கோபால், முரளிகமல், சிரிகோ உதயா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.
விஜய்குமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் படத்திற்கு துணை.
வழக்கமான ஆக்ஷன் கதை, சற்றே வித்தியாசமான முறையினில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்.
‘அமீகோ கேரேஜ்’ – குறைகளுடன் கூடிய ஆஸ் யூசுவல் . தமிழ் வாழ்க .
–தேவிமணி.