நடிகர் சங்கப் பொதுக்குழுவில் கமல்ஹாசன் ஸ்கைப் மூலம் பேசியது ஒளிபரப்ப பட்டது.அதில் கமல் பேசியதாவது,, “நமது இடத்தில் பொதுக்குழுவில் நடத்த வேண்டும் என்று ஆசைபட்டேன். அதை நடத்த வைத்தவர்களுக்கு நன்றி. நமக்குள் ஒற்றுமை வேண்டும். என்னை விட வயதில் இளையவர்களுக்கு நல்ல நட்பும், நேசமும் இருக்கிறது. அதற்காக தான் இளைஞர்கள் எல்லாம் ஒன்றுக் கூடி இப்பொதுக்குழுவை நடத்தி வருகிறார்கள். நாங்கள் எல்லாம் ஒதுங்கியிருந்து ரசித்து வருகிறோம். நல்ல முடிவுகளை விரைவில் எடுங்கள். நம்முடைய மறுப்பாளர்களுக்கும்(சரத்,ராதாரவி ) அழைப்பு விடுங்கள். பெரிய மனிதர்களாவது அப்படித்தான் என நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.