நடிகர்சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொண்டு வடிவேலு பேசியதாவது, “சரோஜாதேவி போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டது சந்தோஷத்தை அளிக்கிறது. நடிகர் சங்கத்தை கட்டியே தீருவோம் என்பவர்களை தடுப்பதற்கு ஒரு அணி கிளம்பியிருக்கிறது. தற்போது இன்னொரு இடத்தை கானோம் என்கிறார்கள். அதை கண்டுபிடிக்க கிளம்ப வேண்டியதிருக்கிறது. இந்த அணியினர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும்வரை நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதற்கு பெரியவர்கள் எல்லாம் வாழ்த்துங்க, இளைஞர்கள் எல்லாம் கைகொடுங்க, எதிரிகளை எல்லாம் உதறிவிடுங்க, துரோகிகளை எல்லாம் துவம்சம் பண்ணுங்க” என்று ஆவேசமாக பேசினார்.