சின்னத்திரை மற்றும் திரைப்பட காமெடி நடிகர் சேஷு, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் சேஷு நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேஷுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிக்கரணையில் உள்ள சாய் பாபா நகரில் உள்ள 3வது மெயின் ரோடு, 3வது குறுக்குச் சந்தில் உள்ள சேஷுவின் வீட்டில் அவரது உடல் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை 8 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.