சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்படும் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி – பரத் ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களது வீட்டில் எளிய முறையில் நடந்தது முடிந்தது.ஓதில் இரு வீட்டாரின் உறவினர்கள் நன்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.மணமக்கள் இருவரும் நடிகர் விவேக்கின் கனவை நிறைவேற்றும் விதமாக இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள், மூலிகை பூ செடிகள் நட்டு வைத்தனர். அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினர்.