நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், த .செ ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கி வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தாக நடிக்க உள்ள ‘தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு,வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக 5 -6 மாதங்களை லோகேஷ் கனகராஜ் எடுத்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து தலைவர் 171 படத்தின் டைட்டில் வெளியீடு குறித்த அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளார்.
மேலும் இப்படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளவர் ரஜினிகாந்தின் வித்தியாசமான கெட்டப்பில் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் ரஜினியின் இந்த போஸ்டரை தன்னடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, பிளாஸ்ட் என்று தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளார்.