நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ‘கர்ணா’ படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் சூர்யா அடுத்தடுத்து தமிழில் புறநானூறு மற்றும் வாடிவாசல் படங்களில் நடிக்க உள்ளதாகவும் ஏற்கனவே தகளவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா இணைய உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.
கேங்ஸ்டர் மற்றும் காதலை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் சூர்யாவின் 44வது படமாக இந்த படம் உருவாக உள்ள நிலையில், சூர்யாவின் 43வது படமான ‘புறநானூறு’ படம் கைவிடப்பட்டதா என்ற கேள்வியையும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.