மீனாட்சி அம்மன் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் அருண்குமார் சம்மந்தம், சங்கர்தயாள் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம்,’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. இதில், செந்தில்,யோகிபாபு, பருத்தி வீரன் சரவணன் ,சுப்பு பஞ்சு, லிசி ஆண்டனி,ப்ரான்ங்ஸ்டர் ராகுல்,அர்ஜுனன் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரங்கள் இமயவரம்பன் அத்வைத் ஜெய் மஸ்தான், ஹாரிகா கோவிலம்மா, பாவாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள சங்கர் தயாள் கூறுகையில்,”தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கிறது.
இதில் வித்தியாசமாக மிகவும் ஜாலியாக நடப்பு அரசியலை பள்ளி மாணவர்களை மையப்படுத்தி, முழுக்க முழுக்க ஒரு அரசியல் நகைச்சுவை படம் பண்ணினால் என்ன என தோன்றியதன் விளைவே இப்படம். இதில் நகைச்சுவை நடிகர்கள் செந்தில்,யோகிபாபு இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நாளைய உலகின் எதிர்காலத்தை தீர்மானிக்க போவது இந்த குழந்தைகள் தானே. குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் வகையில் இரட்டை அர்த்த வசனங்கள் ஏதுமின்றி, முழுக்க,முழுக்க ஜாலியான திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ‘கே எம் கே’ (குழந்தைகள் முன்னேற்றக் கழகம்) என்ற கட்சியின் தலைவராக செந்தில் நடிக்க, யோகி பாபு கட்சியின் செயலாளர் பதவியை கைப்பற்றும் நோக்கில் கட்சிக்குள் தனது ஆதரவாளர்களை திரட்ட, கட்சிக்குள் மோதல் வெடிக்கிறது அதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தில் நடப்பு அரசியலை மையப்படுத்தி யாரையும் காயப்படுத்தாமல் உருவாகியுள்ளது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடி நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம்”.என்கிறார்.இப்படத்