நடிகர் டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் ” தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.