ரஜினியின் ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குவதாக கமிட் செய்யப்பட்டு பின்னர் அதிலிருந்து விலகியதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி சில நாட்கள் நடந்தது.இப்படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது இடைவெளியின்றி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக, ‘துப்பாக்கி’, ‘பில்லா 2’ மற்றும் ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களிலும், பாலிவுட்டில் ஒரு சில படங்களில் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வரும் வித்யுத் ஜாம்வல் தான் இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன்,