நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,உருவாகவுள்ள ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப் படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வெளியான போஸ்டரில் கைக்கெடிகாரங்களினால் ஆன கைவிலங்கை ரஜினிகாந்த் போட்டிருக்கும் நிலையில் பல்வேறு கதைகள் யூகம் செய்யப்பட்டது.
இந்த படம் டைம் ட்ராவல் படமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இதில் ரஜினிகாந்த் தங்கத்தை கடத்தும் பிரபல கடத்தல்காரர் கேரக்டரில் நடிக்கிறார் என்கிறார்கள்.கிட்டத்தட்ட பில்லா பட கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் கதை குறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது ’ஒவ்
வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள், ஆனால் நாங்கள் வேற மாதிரி எழுதி வைத்திருக்கிறோம் என்று கூறிய நிலையில் அவருடைய வேற மாதிரி எழுத்து என்பது தங்கக் கடத்தல்காரன் கதையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
மேலும் இப்படத்துக்கு ரஜினி நடிப்பில்பல வருடங்களுக்கு முன்பு வெளியான கழுகு படத் தலைப்பையே சூட்டலாமா என படக்குழு யோசனை செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.