சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் தொடர்ந்து, சின்னத்திரையில் நடிகராக களமிறங்கி . ‘தென்றல்’, ‘முந்தானை முடிச்சு’ போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து திரைப் படங்களிலும் சிறு சிறு வேடங்களில் தலைக்கட்டியவர் தற்போது இயக்குநராக கேன் என்ற படத்தின் மூலம் புது அவதாரம் எடுத்துள்ளார்.
. ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரை சேர்ந்த இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகியுள்ளது.இதில் மிகவும் புதுமையாக இப்படத்தில் நடித்துள்ள13 நடிகர் நடிகைகளின் முகங்களின் மூலம் ஒரு புதிய முகத்தை வெளியிட்டுள்ளார்.எட்டு நாட்களில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை இது.
இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, அக்சராராஜ்,கலையரசன் யாஷிகா ஆனந்த்,தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா,கருணாகரன்,ரெடின் கிங்ஸ்லி, மாறன், ஸ்ரீமன்,விடிவி.கணேஷ், கவுசல்யா , நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு கலை என பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடித்துள்ளது. இப்படத்தை ஷோபனா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் கருணாநிதி.டி தயாரித்துள்ளார். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள ஆடம்ஸ் கூறுகையில்,”ஒரு பெண்ணின் பாயிண்ட் ஆஃப் வியூவில் நகர்கிற ஒரு அழகான காதல் காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை குறிக்கும் வகையில், இப்படத்துக்கு ஆங்கிலத்தில் ‘கேன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘கல்கி’ மாதிரியான ஒரு படத்தை பாலச்சந்தர் உருவாக்காமல் இருந்திருந்தால், நான் இயக்குனராக ஆகியிருக்க முடியாது. இதில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் பேனாவை திருடி, அதில் எஸ் ஜே சூர்யா என்கிற ஸ்கிரிப்ட் ரைட்டரின் ‘இங்க்’ கை ஊற்றி எழுதிய கதை என்றே சொல்லலாம். இதில் இருவரது சாயலும் இருக்கும். இப்படத்தின் மூலம் பெண்மை உயர்ந்து நிற்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். ஊட்டியை கதை களமாக கொண்டுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
இதில் கலையரசன், பிரணவி, தம்பி ராமையா, கோவை சரளா,கவுசல்யா, வி டிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே திரண்டு நடித்துள்ளது. கிரைம், ஹாரர் இல்லாமல் ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இப்படத்தில், சின்னதாக ஒரு ‘திரில்லர்’ இடம்பெற்றுள்ளது’.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரணவி ஒரு திரைப்பட இயக்குனராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நாயகர்கள் ஹேமந்த் மேனன் ஒரு ஆர்க்கிடெக்ட் ஆக வருகிறார் கலையரசன் ‘ஸ்டில்’ போட்டோகிராபராகவும் இன்னொரு நாயகி ‘ஹவுஸ் ஒய்ப் ஆகவும் வருகிறார்.
இந்த படத்தோட ‘ஒன் லைன்’ என்று பார்த்தால், காதலில ஆண்களைவிட பெண்கள் உறுதியானவர்கள் இல்லை என சிலர் சொல்வது உண்டு. ஆனால் காதலில்,ஆண்களை விட பெண்கள் தான் உறுதியானவர்கள் என்பதை சொல்லும் வகையில் இந்த படம் இருக்கும்.இப்படம் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரம் வெளியாகும் . என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை பிரகாஷ் ருத்ரா கவனிக்க,அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.