பூனையின் உடம்புக்குள் இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை பழி வாங்கினால் எப்படி இருக்கும்…..இது தான் ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும் ‘மியாவ்’ படத்தின் ஒரு வரி கதை. இப்படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி மற்றும் ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.