கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தங்களது 2 மகன்களை நினைத்து எப்படியாவது சேர்ந்து விடுவார்கள் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி நேற்று சென்னை குடும்பந கோர்ட்டில் விவகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளது தனுஷ் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்நிலையில், இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லீங்க வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் என்பது போல, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன் ஆரோக்கியமான உடல் + மகிழ்ச்சியான மனம் + மனித இதயம் = அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு மந்திர மருந்து என்ற கேப்சனுடன் ஃபிட்னஸ் தொடர்பான கார்டு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில் தினமும் 9 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும், 8 மணிநேரம் தூங்க வேண்டும், 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், 6 நிமிடம் தியானம், 5 நேரங்களில் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும், 4 பிரேக் எடுக்க வேண்டும், 3 முறை ஆரோக்கியமான உணவு, நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும், தூங்கும் முன்பு 2 மணிநேரம் செல்போன் பயன்படுத்தக் கூடாது, 1 முழு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.