இந்தியன் 2 .
லஞ்சத்தை தனது இரட்டை விரலால் துளைத்தெடுத்து யமனுக்கு அனுப்பி வைத்த விடுதலை வீரர் சேனாபதியை வருகிற ஜூன் 12 -ம் தேதி பார்க்கலாம் என்கிற நம்பிக்கை நமக்கு.!
இதை அதிகாரப்பூர்வமாக ‘அறிவிக்கலாமே ‘ என்கிற ஆதங்கமும் இருக்கு.!
இதை உணர்ந்து விட்டதின் வெளிப்பாடு இன்று வெளியான போஸ்டர்.!
சேனாபதி மீண்டும் வந்து விட்டார்.
சமூக விரோத சக்திக்கு எதிராக சகிப்புத்தன்மை சற்றும் இல்லை. அந்த மனிதர் மீண்டும் வந்து விட்டார் என்பதை அந்த போஸ்டர் அறிவித்தது.
இந்திய ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்கிற போராட்டம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிற நிலையில் இந்தியன் 2 வருகிறான். உலகநாயகன் கமல்ஹாசன், நடித்து முன்னர் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை தந்திருந்தது. தொடர்ச்சியாக இந்தியன் 2 வெளியாகிறது.
கமலின் விக்ரம் 2 உலக அளவில் சாதனை செய்திருப்பதை அடுத்து இந்தப்படம் வெளியாகிறது. 1000 கோடி வசூல் சாதனையை நோக்கி இந்தப்படம் நகரும் என்கிற எதிர்பார்ப்பு இன்டஸ்ட்ரியில் இருக்கிறது.
” சமூக விரோத சக்தி வெளிப்படுகிறபோதெல்லாம் அதை அடக்கும் சக்தியாக இந்தியன் எழுவான் “என்பதை உள்ளடக்கிய அரசியல் படத்தை இயக்குநர் ஷண்முகம் தந்திருக்கிறார் . என்பதை லைகா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தமிழ் தெலுங்கு ,ஆங்கிலம் ,இந்தி ஆகிய மொழிகளில் இந்தியன் 2 பட போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
1996 -ல் வெளியான இந்தியன் படத்தில் இரண்டு வேடத்தில் தந்தை ,மகனாக கமல்ஹாசன் நடித்து பட்டைய கிளப்பி இருந்தார்.
இந்த படத்தில் உலகநாயகனுடன் சித்தார்த்,ராகுல் பிரீத் சிங் ,காஜல் அகர்வால் ,எஸ். ஜெ. சூர்யா ,பிரியா பவானி சங்கர் ,ஆகியோர் இருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக மறைந்து விட்ட நெடு முடி வேணு ,விவேக் ஆகியோரது கேரக்டர்களும் படத்தில் சிறப்புடன் படமாக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசை . படத்துக்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.