இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில பிரச்சினைகள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன்படி இம்மாதம் ஏப்ரல் 15 – ந்தேதி அன்று திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர் அதன்படி இன்று காலை சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.திருமணத்தில் தமிழக முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார் மேலும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. கே. பாக்யராஜ், பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி, விஷ்ணு வர்தன், விக்னேஷ் சிவன் – நயன்தாரா, ரவி குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.