நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கடந்த வருடம் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சுமுகமாக பிரிவதாக தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்தனர்
இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதையடுத்து இரு குடும்பத்தினரம் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில்,சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டுள்ள நீதிபதி இருவரும் அக்டோபர் 7-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.