நடிகர் விஜய்யுடன்,வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா.இசையமைத்து வருகிறார். நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்துள்ள இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது.இந்த விசில் போடு பாடலில் நடிகர் விஜய்யுடன், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் அதிரடி ஆட்டம் போட்டிருந்தனர்.
யுவன் இசையில் . விஜய் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.நெட்டிசன்கள் பலரும் யுவனின் சமூக வலைதளத்தில் அவரை ஏகத்துக்கும் கலாய்த்து தள்ளியிருந்தனர்.இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் ஆகியுள்ளது. விஜய்யின் விசில் போடு பாடலுக்கு கிடைத்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களே இதற்கு காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இன்ஸ்டாகிராம் பக்கம் டெலிட் ஆனதாக யுவன்சங்கர்ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்மீது அக்கறை கொண்டு மெசேஜ் போட்ட அனைத்து நபர்களுக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் தன்னுடைய அக்கவுண்ட்டை மீண்டும் எடுக்கும் முயற்சியில் தனது தொழில்நுட்ப குழு, முயற்சித்து வருவதாகவும் விரைவில் மீண்டும் இன்ஸடாவில் இணைவேன் என்றும் யுவன் தெரிவித்துள்ளார்.
Hey guys,
Thank you for the concerned messages. It’s just a technical error, my team is trying to recover my Insta account and I’ll be back soon 😊
Love, always!
— Raja yuvan (@thisisysr) April 18, 2024