இந்திய நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யக்கூடிய தேர்தல் இன்று ( 19.4.2024 ) மாலை 6 மணியுடன் நடந்து முடிந்து விட்டது. மாலை 4 மணியளவில்தான் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தேர்வுக்கான என்னுடைய வாக்குச் சீட்டை பதிவு செய்தேன்.
சாலிகிராமம் காவேரி உயர்நிலைப் பள்ளியில் எனது பகுதிக்கான வாக்குப் பதிவு மய்யம் இருந்தது.
நான் வாக்களிக்கச் சென்றபோது முதல் முறையாக வாக்களிக்க வந்திருந்த பெண்களை அதிக அளவில் காண முடிந்தது. ஆர்வத்துடன் வாக்களித்தனர். பெரும்பாலோர் திராவிட முகங்களாகவே இருந்தனர். தற்கால நாகரீகம் ,ஆண்களுக்கு நிகரானவர்கள் என்கிற கர்வம் அதிகமாகவே இருந்தது. தந்தை பெரியார் மண்அல்லவா இருக்கத் தான் வேண்டும்.,
பேரறிஞர் அண்ணா ,பெருந்தலைவர் காமராஜர் ,கலைஞர் கருணாநிதி ஆகியோரது நிலமிது என்கிற பெருமையுடன் அவர்களில் சிலருடன் பேசினேன்.
திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு டில்லி பாராளுமன்றத்தில் இடம் உறுதி செய்யப்படுகிறது என்கிற நம்பிக்கை எனக்குள் பதிந்தது.
சாதி ,மதம் ,ஆன்மீகப் போர்வைக்குள் ஆயுதம் ஏந்தல் என்றெல்லாம் சொன்னார்கள். இந்தியாவின் தலைநகரம் ஒருபோதும் நாகபுரி ஆகாது ,வேரும் வேரடி மண்ணுமாக அமிலத்தில் அமிழ்த்தி தூக்கி வீசப்படும் என்பது புரிந்தது.
எனது தொகுதி எம். பி. தமிழச்சி. பெருமையாக இருக்கிறது நினைத்தபோது .
–தேவிமணி