
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில்…
“ஹரி சார் இயக்கத்துல விஷால் ஹீரோவா ஒரு படம் தயாரிப்போம்னு நினைக்கவே இல்லை. இது எல்லாம் அமைஞ்சது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்வேன். சந்தோஷத்தோடு பண்ணியிருக்கிற படம் இது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். அடுத்த வாரம் படம் வருது, உங்கள் எல்லோருக்கும் இது பிடிக்கும். என் மாப்பிள்ளை கார்த்திக் சுப்பராஜ் மற்றும் என் குடும்பத்துக்கு என் நன்றிகள்.”
நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது…“மகிழ்ச்சியான தருணம். இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல். ஹரி அண்ணன், தம்பி விஷால் எல்லாரும் நெருக்கமானவர்கள். ஹரி அண்ணனிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். உழைப்பு, உழைப்பு அயராத உழைப்பு. விஷால் என் தம்பி. தயாரிப்பாளர் கார்த்திக் அவர்களிடம் இருக்கும் உண்மை எனக்குப் பிடிக்கும். ஹரி அண்ணனும் நானும் ஒரே ஸ்கூல், அவர் கூப்பிடார் வந்துவிட்டேன். விஷாலுடன் ஒரு வேலை நடந்து கொண்டிருக்கிறது, அது நடந்தால் பெரிதாக பேசப்படும். இந்தப்படம் தீ மாதிரி வேகமாக இருக்கும், அனைவருக்கும் பிடிக்கும், நன்றி.”

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பேசியதாவது…‘ரத்னம்’ பட டீமிற்கு நன்றி. தேசிய விருது பாராட்டுகளுக்கு என் நன்றிகள். ஹரி உடன் நிறையப் படம் வேலை செய்துள்ளேன். ‘ஆறு’ படத்தில் ஆரம்பித்து இப்போ 6வது படம். கதை எழுதி ஒரு படம் உருவாவது எல்லாமே ஒரு இயக்குநர் கையில் தான், அவரால் தான் நாங்கள் எல்லோரும் வேலை செய்கிறோம். ஹரி எனக்கு குடும்பம் மாதிரி. அந்த உறவு தான் எங்கள் பாடல்களில் பிரதிபலிக்கிறது. இந்தப்படம் அவர் படத்தில் இருந்து வித்தியாசமாக இருந்தது. விஷால் சாருடன் ஒரு இடைவெளிக்குப் பிறகு வேலை செய்கிறேன் அதுவும் எங்களுக்குப் பிடித்த ஹரி சார் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் மிக அன்பானவர், அவருக்கு நன்றி. சமுத்திரக்கனி சார் அருமையாக நடித்துள்ளார். எல்லோருமே இந்தப்படத்தில் கலக்கியுள்ளனர். சிங்கிள் ஷாட்டில் ஆக்ஷன் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும். எப்படி செய்தார்கள் என்றே தெரியவில்லை. இது தான் மிகப்பெரிய சிங்கிள் ஷாட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன், பிரமிப்பாக இருந்தது. இசையமைப்பாளராக நான் ரொம்பவும் எஞ்சாய் செய்தேன். ஹரி சார் ஸ்பீட் அவரது சிந்தனையிலேயே இருக்கிறது. அவர் படத்தில் இது எனக்கு பிடித்த படம். விஷால் சார் இதில் கலக்கியிருக்கிறார். ப்ரியா பவானி சங்கர் நன்றாக நடித்துள்ளார். அனைவருக்கும் பிடித்த படமாக இப்படம் இருக்கும், நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…தமிழ் சினிமாவில் படு பயங்கர ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்த ஹரி சார் இயக்கியுள்ள ‘ரதனம்’ படத்தின் டிரெய்லரே அவ்வளவு நன்றாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். விஷால் சார் இரண்டு நாள் முன்னாடி ஒரு இண்டர்வியூ தந்தார், அது தான் இப்போது வைரல். அவர் படத்திற்கு பிரச்சனை வரும் என்றார் ஆனால் இப்படம் அதைத்தாண்டி பெரிய வெற்றி பெறும். விஷால் சாருக்கு ஒரு வேண்டுகோள், மார்க் ஆண்டனி 100 கோடி அடுத்து 300 கோடி படம் தரனும், அரசியல் வேண்டாம், இதை வேண்டுகோளாக வைக்கிறேன். சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெற்றிப்படம் இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. அதை உடைத்து இந்தப்படம் பெரிய வசூலைக் குவிக்கும் படமாக அமைய வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசியதாவது…‘தாமிரபரணி’ மிகப்பெரிய ஹிட், ‘பூஜை’ செம்ம ஹிட். இந்த இரண்டு படங்களையும் நான் ஏரியா விநியோகம் செய்துள்ளேன். சினிமாவில் இந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைவது வெற்றிதான். விஷால் கடுமையாக உழைப்பார், அவர் உடம்பில் நிறைய தழும்புகள் இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது…ஹரி சாருடன் ‘யானை’ படத்தில் வேலை பார்க்கும் போது அவரது படங்களை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பேன். யோகி உழைப்பு தாண்டா ஜெயிக்கும் என்பார். அவர் இன்னும் நிறையப்படங்கள் செய்ய வேண்டும். விஷால் சார் என்றும் மாறாதவர், அறிமுகமானதிலிருந்து இன்று வரை ஒரே மாதிரி பழகுகிறார். தேவி ஶ்ரீ பிரசாத் சார் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார். சமுத்திரக்கனி அண்ணா எப்போதும் எனக்கு நல்லது நினைப்பவர். தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் ஸ்டோன் பெஞ்சுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.

தனஞ்செயன் சார் சொன்னாரே ஒரு சின்னப்படம் வருகிறது என்று, அதற்காகத்தான் போராடுகிறேன். சினிமாவை யாரும் கட்டுப்படுத்த முடியாது, சினிமா எல்லோருக்குமானது யார் வேண்டுமானாலும் வரலாம், அவ்வளவு தான். அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நாங்கள் ஏன் இன்னொரு கொடியைத் தூக்கிக் கொண்டு அரசியலுக்கு வர வேண்டும். எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது அதை விட்டுட்டு நான் ஏன் அரசியலுக்கு போகனும்? அவர்கள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். இந்தப்படம் ஹரி சாரின் உழைப்பு, அவர் யுனிவர்ஸில் நாங்கள் வெலை பார்த்துள்ளோம் உங்களுக்கு எண்டர்டெயினர் காத்திருக்கிறது, நன்றி.