கமல்ஹாசனின் விக்ரம் , லியோ உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு ’ஈகிள்’ ‘கழுகு’ ‘ராணா’, ‘தங்கம்’ அல்லது ‘கடிகாரம்’ உட்பட சில டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’தங்கம்’ அல்லது ’கோல்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
முன்னதாக தலைவர் 171 ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கல் யில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைவர் 171 வது படத்தின் அப்டேட் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் , “நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள்,இது தான் படத்தின் தலைப்பா? தாறு மாறா இருக்கே என பதிவிட்டு வருகின்றனர்.மேலும் விஜய் நடித்த வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக கோட் என்பது போல டிஸ்கோ படத்திற்கும் மிகப்பெரிய விளக்கம் இருக்குமா என்கிற கேள்விகளையும் ரஜினி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
டைம் டிராவல் படமாக உருவாக்க உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த ஒரு கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாகவும்,இவருடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்பட சிலர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அனிருத்இசையமைக்க இருக்கிறார் என்பதும் அன்பறிவ் இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனரக்ளாக பணிபுரிய இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.