கமல்ஹாசனின் விக்ரம் , லியோ உள்ளிட்ட படங்களைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள தலைவர் 171 வது படத்தை இயக்க உள்ளார், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு ’ஈகிள்’ ‘கழுகு’ ‘ராணா’, ‘தங்கம்’ அல்லது ‘கடிகாரம்’ உட்பட சில டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது முன்னதாக தலைவர் 171 வது படத்தின் அப்டேட் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்த நிலையில்,இன்று மாலை 6 மணிக்குபடத்தின் டைட்டில் டீசர் வெளியானது சமூக வலைத்தளங்களில் தீய பரவி வரும் இந்த டீசரில், எதிரிகள் ரஜினியை போட்டுத்தள்ள காத்திருக்க, அவர்களது கூடாரத்திற்குள்ளேயே அட்டகாசமாக நுழையும் ரஜினி,தனது ஸ்டைலில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடலில் இடம்பெற்ற
“அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்ன சரியென்ன வந்து நீ விளையாடு அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே ஏப்பத்தை போனாலும் இன்பத்தை தள்ளாதி . சோறுண்டு சுகமுண்டு மதுவுண்டு மாதுவுண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடமுண்டு.போடா…என ரஜினி சொல்லிக்கொண்டே அத்தனை பேரையும் வீறு கொண்ட மதயானையாக மாறி துவம் சம் செய்து விட்டு, தனது கைப்பட்டையை துடைக்க, அதில் கூலி என்ற டைட்டில் தெரிகிறது.
அப்போது அங்கு போன் ஒலிக்க ரஜினி போனை எடுத்ததும் என்னடா நடக்குது அங்கெ ஒருத்தன் கூட போனை எடுக்க மாட்டேங்கிறீங்க அவனை முடிசீங்களா,இல்லையா என வில்லனின் குரல் கேட்க, அதைக்கேட்ட ரஜினியோ அட்டகாசமாக சிரித்து கொண்டே முடிச்சுலாம்மா என்கிறார். ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த டீசர் நிறைவடைகிறது.,