தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் கனவும் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் லட்சியமுமான நடிகர் சங்க கட்டட பணிகள் இன்று (22.04.24) மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர், பொருளாளர் சி.கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர் குமாரி சச்சு, கட்டடக் குழு உறுப்பினர் . கடலோரக் கவிதைகள் ராஜா, நடிகர் சங்க மேலாளர் தாம்ராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.