அருண் விஜய் நடிப்பில், பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகி வரும் புதிய படம், “ரெட்ட தல” ஆக்சன் திரில்லராக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.
இதில் படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர் , இந்நிலையில், தற்போது படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,இரண்டு அருண் விஜய்யும் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணமாக ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை டிஜோ டாமி மேற்கொள்ள,சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.