தமிழில் ‘பீஸ்ட்’ மற்றும் ‘டாடா’ என இரு படங்களில் நடித்தவர் அபர்ணா தாஸ். மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா தாஸ், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் நடித்த தீபக் பரம்போலை காதலித்து வந்தார். இவர்களது திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இதையடுத்து நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியின் படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. நேற்று தனது சங்கீத் நிகழ்ச்சியின் வீடியோ மற்றும் புகைப்படங்களையும் அபர்ணா தாஸ் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், இருவருக்கும் இன்று அதிகாலை கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் எளிமையான முறையில் நடந்தது .
நடிகர் தீபக் பரம்போல் வேட்டி மற்றும் மேலாடை அணியாமல் வெறும் துண்டை மட்டும் அணிந்து கொண்டு துளசி மாலையை அணிந்து கொண்டு வர, கேரளா கசவு சேலையை அணிந்து கொண்டு மணமகளாக அபர்ணா தாஸ் துளசி மாலையை அணிந்துக் கொண்டு கடவுள் முன்னிலையில் இருவரும் மாலையை மாற்றிக் கொண்டு இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்துக் கொண்டனர். இத் திருமணத்தில் மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் என பலரும் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரம்போல் தம்பதியினரை வாழ்த்தினர்.