‘போர் தொழில்’,‘ப்ளூ ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து, ,அசோக் செல்வன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’.அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.