சமீபத்தில் வலைதளம் ஒன்றில் , தமிழக மக்கள் சோம்பேறிகள் , அவங்களுக்கு மதுக்கடை போதும் …… என்ற தலைப்பில் விஷால் கூறியதாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்கள் .இது முற்றிலும் தவறான செய்தி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார் . மேலும், தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியைவெளியிட்டுள்ள வலைத்தளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .இது போன்ற வலைதளத்தில் உண்டாக்கப்படும் செய்தியால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கிறார்கள் . மேலும் சமீப காலமாக முகம் தெரியாத நபர்கள் போன் மூலம் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு விஷால் தரப்பில் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.