சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக ந டி த்துள்ளவர் நடிகை ராதா இவர் சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு நெற்குன்றம் பல்லவன் நகர் பகுதியைசேர்ந்த எல்.ஐ.சி ஏஜென்ட் முத்துக்கிருஷ்ணன் என்பவர்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார். அப்போது “பிட் காயின்” மூலம்பணம் முதலீடு செய்தால்மாதம்தோறும் தொடர்ந்து நல்லவருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதாகவும், .இ தைய டு த் து முத்துகிருஷ்ணன் மூலம் நடிகை ராதா ரூ.90 ஆயிரம் முதலீடு செய்ததாகவும் கூறப்படு கிறது.
ஆனால் இதுநாள் வரை எந்தவொரு பணமும் திரும்பி வரவில்லை. மாறாக முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வடபழனி, பெரியார் பாதையில் நண்பர் ஒருவர் நடத்தி வரும் டிராவல்ஸ்அலுவலகத்திற்கு வந்த முத்துகிருஷ்ணன் மற்றும் நடிகைராதா ஆகியோர் இடையேமுதலீடு செய்த பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ராதா மற்றும் அவரது தாய்பவானி, மகன் தருண் ஆகிய3 பே ரும் சே ர்ந் து முத்துகிருஷ்ணனை சரமாரி யாக அடித்து உதைத்தனர்.
இதில் தலையில் அடிபட்டு பலத்தகாயமடைந்த முத்துகிருஷ்ணன் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் தன் மீதுகொலைவெறி தாக்குதலநடத்திய நடிகை ராதா உள்ளிட்ட 3பேர் மீதும் உரிய சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடபழனி போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார் இது தொடர்பாக போலீசார் இருதரப்பினர் மீதும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே நடிகை ராதா இவர் மீது கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவர் மகன் தருண் மீதும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது