G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ‘இங்க நான் தான் கிங்கு’ திரையரங்குகளில் மே 10 அன்று வெளியாக தயாராகி வருகிறது.
இந்த தலைப்பு கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் ‘இங்க நான் தான் கிங்கு’ என்று இப்படத்திற்கு பெயர் வைத்தோம் என்று தெரிவித்த படக்குழுவினர், நகைச்சுவை திருவிழாவாக இப்படம் இருக்கும் என்று கூறினர்.
ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழ்ந்து தங்களது கவலைகளை மறக்கும் வகையில் ‘இங்க நான் தான் கிங்கு’ உருவாகியுள்ளது. சந்தானத்தின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அதே சமயம் ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க சிரிக்க வைக்கும் படமாக இது இருக்கும்.
தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். D. இமானின் இசையில் பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. சந்தனம் நாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவு பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியுள்ளார். பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் எழுத்தாளராக பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு – ஓம் நாராயண், எடிட்டிங் – எம். தியாகராஜன்,
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரித்துள்ளார். மே 10 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.