மக்கள் நீதி மய்யக்க்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது,!
‘உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.
உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்