ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் My India மாணிக்கம் தங்களது முதல் தயாரிப்பாக தயாரிக்கும் படத்திற்கு ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” என்று பெயரிட்டுள்ளனர்.
உன்னை நான் சந்தித்தேன்,உதயகீதம் ,உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளீ திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் K.ரங்கராஜ் இந்த படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார். மற்றும் பார்கவ் , நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.