ஷார்க் 9 பிக்சர்ஸ் பட நிறுவனம் சிவா கில்லாரி தயாரிப்பில்,மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க,மெரி ரிக்கெட்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார் இவர்களுடன் கருணாஸ்,ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன் ,அருள் தாஸ் தீபா சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்
இப்படம் குறித்து இயக்குனர் மைக்கேல் கே.ராஜா கூறுகையில்,”இப்படத்தின் திரைக்கதையை என் சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறேன். நாயகனான விமல், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர். மருத்துவமனை ஒன்றில் அவரது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது தாத்தவை அவருக்கு துணையாக வைத்து விட்டு, மனைவியின் மருத்துவ பணத்தேவைக்காக இறுக்கமான மனதுடன் சென்னை மருத்துவமனை ஒன்றின் மார்ச்சுவரியிலிருந்து முக்கிய பிரமுகர் ஒருவரின் உடலை ஒன்றை எடுத்துக்கொண்டு திருநெல்வேலிக்கு புறப்படுகிறார்.
வழியில் அவரிடம் லிப்ட் கேட்டு ஏறுகிறார் கருணாஸ். நாடகங்களில் கர்ணன் வேஷம் போட்டு நடிக்கும் கருணாஸ் சதா பேசிக்கொண்டே அவருடன் பயணிக்கிறார். வழியில் கருணாசால் பெரிய பிரச்னை ஏற்படுகிறது.
இந்நிலையில்,ஆம்புலன்சில் இருக்கும் முக்கிய பிரமுகரின் டெட் பாடிக்காக திருநெல்வேலியில் அவரின் உறவினர்கள் கூட்டம் காத்திருக்க, குறிப்பிட்ட நேரத்திற்குள் ‘டெட் பாடி’ ஊர் போய் சேர்ந்ததா,இல்லையா? கருணாசால் ஏற்பட்ட பிரச்சனை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதையும், முரண்பட்ட இந்த இரண்டு கதாபாத்திரங்களில் பயணம் மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே மனிதம் பற்றி பேசும் இப்படத்தின், பிளாக் காமெடியுடன் கூடிய எமோஷனல் டிராமாவாக உருவாகி உள்ளது.
இப்படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுளோம்’ என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை டெமில் சேவியர் கவனிக்க,என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.