‘கேரட் அட் வொர்க்ஸ்’ பிரியா ஆனந்த் தயாரிப்பில், ஆனந்த் பால்கி இயக்கத்தில், சோனியா அகர்வால்,இசையமைப்பாளர் தருண்குமார் இணைந்து நடித்த ‘பேய் காதல்’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தமன் குமார் பேசுகையில்,”கொரோனா கால கட்டத்துக்கு பிறகு இன்டிபென்டன்ட் பாடல்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது
‘என்ஜாய் எஞ்சாமி’ போன்ற சுயாதீன பாடல்கள் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது..அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் பால்கி, பேய் காதல் என்ற சுயாதீன பாடல் குறித்து என்னிடம் பேசினார். குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் ஹாரர் அட்வெஞ்சர் பாடலாக இது உருவாகியுள்ளது சோனியா தான் பிரதான நாயகி.இதை நான் ஒரு திரைப்படமாகவே பார்க்கிறேன்
இந்த இசை ஆல்பம் உருவாக்கி முடிக்கப்பட்டவுடன், நாயகி சோனியா அகர்வால் என முடிவானது. சப்போர்டிங் கதாபாத்திரத்தில் நீங்களே நடித்து விடுங்கள் என இயக்குனர் ஆனந்த் பாலாஜி கூறிவிட்டார். நானும் இதில் ஏதோ ஒரு பேய் கேரக்டர் மாதிரி இருப்பேன் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை இதில் ஹீரோவாகிவிட்டார் இயக்குனர். பொதுவாக எனக்கு கோஸ்ட் சப்ஜெக்ட் மிகவும் பிடிக்கும் இயக்குனர் இதில் இன்டர்நேஷனல் பேய்களின் பெயர்களை இணைத்து பாடல் எழுதி இருக்கிறார் அந்த கேரக்டர்களை இதில் நடிக்கவும் வைத்துள்ளார்.
நான் சின்ன வயதில், ‘காதல் கொண்டேன்’ ‘7 ஜி ரெயின்போ காலனி’ உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வாலை தேவதை மாதிரி பார்த்திருக்கிறேன். இதில் அவரோடு சேர்ந்து நானும் நடித்திருக்கிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைக்கும் சோனியா அகர்வால் தேவதையாக தான் இருக்கிறார். என்னையும் இந்த ஆல்பத்தில் பாட வைத்து ஆட வைத்து நடிக்க வைத்து நடிக்க வைத்த இயக்குனருக்கு நன்றி தொடர்ந்து நீங்கள் கதாநாயகனாக நடிப்பீர்களா என கேட்கிறார்கள்.
இதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை இந்த இசை ஆல்பத்தை பார்த்து இயக்குனர்கள் என்னையும் நடிக்க அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் .இசை பெரியதா? பாடல் வரிகள் பெரியதா? ஒரு பாடலுக்கு எது முக்கியம் என கேட்கிறார்கள் , என்னை பொறுத்தவரையில் முதலில் லிரிக்ஸ் தான் முக்கியம். அதன் பின்னர், நல்ல இசை அந்த பாடலை வெற்றிப் பாடலாக மாற்றும் என்றும் இசையமைப்பதே பாடல் வரிகளுடன் சேர்ந்து பாடலை உருவாக்குவதற்கு தான் எனக் கூறியுள்ளார். அதே சமயம் இரண்டுமே முக்கியம் என்பது தான் என்னுடைய கருத்து.இவ்வாறு அவர் கூறினார்