தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’, அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ உள்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது.இந்நிலையில் லைகா தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ‘லாக் டவுன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனுபமா பரமேஸ்வரன் துருவ் விக்ரம் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ’பைசன்’ என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அவர் நடித்து வரும் இன்னொரு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.என். ஆர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையில், சக்திவேல் ஒளிப்பதிவில் , சாபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏ. ஆர். ஜீவா இயக்கி வருகிறார்.