நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை 5 மணிக்கு தனது வீட்டின் முன்பு 10 நிமிடம் நின்று மவுன போராட்டம் நடத்தப் போவதாக நேற்று அறிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழர்கள் தங்கள் வீட்டின் முன்பு 10 நிமிடம் மவுனமாக நின்று மவுன போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்படி நடிகர் சிம்பு தியாகராய நகர், மாசிலாமணி தெருவில்உ ள்ள தனது வீட்டு வாசலில் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா உட்பட குடும்பத்தினருடன் கறுப்பு நிற ஆடை அணிந்து மவுன போராட்டம் நடத்தினார். சிம்பு வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்களும், ரசிகர்களும் கறுப்புச் சட்டை அணிந்தபடி மவுன போராட்டம் நடத்தினர்.இதன் காரணமாக அப்பகுதியே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.