கடந்த ஆண்டு 600/600 மதிப்பெண்களை 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் நடத்திய கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் வைர நெக்லஸ் பரிசாக வழங்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் விழாவை விஜய் நடத்தியிருந்தார்.இந்நிகழ்ச்சி
10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ரிசல்ட்ஸ் வந்துள்ள நிலையில்,நடிகர் விஜய் தனது டுவிட்டரில் “தமிழ்நாடு,புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவித்து வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.